Breaking : 4-வது முறையாக ஆளுநரை சந்தித்தார் விஜய்..! பெரும்பான்மையை நிரூபித்தார்..! நாளை பதவியேற்பு..?

tvk vijay governor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2, விசிக 2. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.. எனவே விஜய் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை கிடைத்துவிட்டது..


இந்த சூழலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்திக்க புறப்பட்டார்.. ஆனால் ஆளுநரிடம் நேரம் கேட்காமல் விஜய் புறப்பட்ட நிலையில், விஜய்க்கு ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. இதையடுத்து ஆளுநர் மாளிகை நோக்கி செண்ற கார் விஜய்யின் கார் யூ டர்ன் போட்டு வீட்டுக்கு திரும்பியது.. இதனால் ஆளுநரை சந்திகாமலேயே விஜய் வீட்டிற்கு புறப்பட்டார்..

ஆளுநர் கேரளத்திற்கு புறப்படவிருந்ததால் விஜய்யை சந்திக்க வில்லை என்று கூறப்பட்டது.. இதையடுத்து ஆளுநர் தனது கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டார்..

இந்த நிலையில் விஜய் மீண்டும் ஆளுநரை சந்தித்தார்.. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலத்தை ஆளுநர் அர்லேக்கரிடம் விஜய் நிரூபித்தார்..

இன்றிரவே விஜய் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வாய்ப்புள்தாக கூறப்படுகிறது.. நாளை பிற்பகல் 3 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க விஜய் தரப்பில் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தால் நாளை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

Read More : Flash: பதவி ஏற்பு எப்போது..? விஜயை செல்போனில் தொடர்புகொண்ட ஆளுநர் தரப்பு..!

RUPA

Next Post

நாளை முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..! 10 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..?

Sat May 9 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2, விசிக 2. இந்திய யூனியன் முஸ்லீம் […]
TVK vijay new 3

You May Like