Flash: பதவி ஏற்பு எப்போது..? விஜயை செல்போனில் தொடர்புகொண்ட ஆளுநர் தரப்பு..!

vijay governor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் சூழல் தொடர்ந்து பரபரப்பாக உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏக்கள் பெரும்பான்மை கிடைக்காததால் பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.


இந்த சூழலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனால் பெரும்பான்மை எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைய விசிக ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு தேவையான 118 என்ற ’மேஜிக் நம்பர்’ கிடைத்துள்ளது.

அதன் பிறகு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்திக்க 4 வது முறையாக விஜய் புறப்பட்டார்.. ஆனால் ஆளுநரிடம் நேரம் கேட்காமல் விஜய் புறப்பட்ட நிலையில், விஜய்க்கு ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. இதையடுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற விஜய்யின் கார் யூ டர்ன் போட்டு வீட்டுக்கு திரும்பியது.. இதனால் ஆளுநரை சந்திகாமலேயே விஜய் வீட்டிற்கு புறப்பட்டார்.

இந்த நிலையில் ஆளுநர் தரப்பில் விஜயை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் விரும்பினால் திங்கட்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை தரப்பில் விஜயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை தங்களுக்கு உகந்த நேரத்தில் வந்து பெரும்பான்மை கடிதத்தை அளிக்கலாம் என விஜயிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more: ஹோர்முஸ் ஜலசந்தி அருகே 18 இந்தியர்களுடன் சென்ற படகு தீ பிடித்து விபத்து.. ஒருவர் பலி..!

English Summary

Flash: Taking oath on Monday.. The Governor’s party contacted Vijay on his cell phone..!

Next Post

Breaking : 4-வது முறையாக ஆளுநரை சந்தித்தார் விஜய்..! பெரும்பான்மையை நிரூபித்தார்..! நாளை பதவியேற்பு..?

Sat May 9 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2, விசிக 2. இந்திய யூனியன் முஸ்லீம் […]
tvk vijay governor

You May Like