“தளபதிய கேட்டேன்னு சொல்லுங்க..” சிரிச்சுக்கிட்டே த்ரிஷா சொன்ன பதில்..! வைரல் வீடியோ..!

trisha vijay

நடிகர் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. நடந்து முடிந்த தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்துள்ளார்..


மேலும் கடந்த 10-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். விஜய்யின் பதவியேற்பு விழாவில் த்ரிஷா கலந்துகொண்டது அதைவிடப் பெரிய பேசுபொருளாக மாறியது. விஜய்யின் மனைவி மற்றும் குழந்தைகள் கூட அந்த விழாவிற்கு வராத நிலையில், விஜய்யின் காதலி என்று கூறப்படும் த்ரிஷா, விழாவின் முதல் வரிசையில் அமர்ந்து விஜய்யின் வெற்றியைப் பெருமையுடன் கண்டு ரசித்தார். இதன் விளைவாக, த்ரிஷாவைப் பற்றிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் அதிகமாக வரத்தொடங்கி உள்ளன..

உண்மையில், த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையே ஒரு ரகசிய உறவு இருப்பதாக நீண்ட காலமாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய் த்ரிஷாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், இருவரும் காதலித்து வருவதாகவும் பலவிதமான கிசுகிசுக்கள் பரவி வந்தன.

எனினும் விஜய்யோ அல்லது த்ரிஷாவோ இதுகுறித்து இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. தங்களைப் பற்றிப் பரவும் வதந்திகள் பொய்யானவை என்று கூட அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதன் மூலம், இருவரும் ஒரு உறவில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த சூழலில் த்ரிஷாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. காரில் அமர்ந்திருக்கும் த்ரிஷாவிடம் ” தளபதியை கேட்டேன்னு சொல்லுங்க” அங்கிருந்தவர்களில் ஒருவர் கூறுகிறார்.. அதற்கு த்ரிஷாவும் சிரித்துக் கொண்டே ” கண்டிப்பா” என்று பதிலளிக்கிறார்..

இதனிடையே விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.. அவர் தனது விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் அவருக்கு ஏப்ரல் 2021-இல் தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் சங்கீதா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து விஜய்யும் த்ரிஷாவும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தன் அகந்தை நொறுங்கிய தருணத்தை நினைவு கூர்ந்த நடிகர் ரஜினிகாந்த்..! “ஒருவர் கூட என்னைப் பார்க்கவில்லை”..

RUPA

Next Post

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.. முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!

Fri May 15 , 2026
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது.. உலகளாவிய எரிசக்தி விலை அதிகரித்து வருவதன் விளைவாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்ப […]
cm vijay new

You May Like