Flash : ஒரே நாளில் ரூ.10,000 உயர்வு.. ஷாக் கொடுத்த வெள்ளி..! அப்ப தங்கம் விலை..?

gold silver

வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் தங்கம் விலையில் மாற்றமில்லை என்றாலும், வெள்ளி விலை ரூ.10,000 உயர்ந்துள்ளது..

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. 


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு 1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

எனினும் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 உயர்ந்து ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை என்றாலும் வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.10,000 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : விமானக் கண்காட்சியில் நடுவானில் மோதி, வெடித்து சிதறிய 2 போர் விமானங்கள்; 4 விமானிகளின் நிலை என்ன..? பதற வைக்கும் வீடியோ..!

English Summary

On this first day of the week, while there is no change in gold prices in Chennai, the price of silver has risen by ₹10,000.

RUPA

Next Post

'இந்துக்கள் நாங்கள் நம்புகிறோம்' சனாதனம் குறித்த உதயநிதி கருத்துக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பதிலடி..!

Mon May 18 , 2026
Former Indian cricketer responds to Udhayanidhi's comment on Sanadhan, saying 'We Hindus believe'..!
Laxman Sivaramakrishnan

You May Like