ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றுவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்ட தேதியிலேயே முடிவுகளை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு மற்றும் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.. மேலும் புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஜூன் 1 முதல் 3 வரை ஆசிரியர்களுக்கு பயற்சி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்..
ஒன்றாம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான புதிய பாடப்புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.. 1 முதல் 3-ம் ஆண்டு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.. 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
Read More : சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையை போட்டுடைப்போம்.. தவெகவுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை..!



