இனி எங்கும் அலைய வேண்டாம்..! வாட்ஸ் அப்-லேயே பிறப்பு சான்றிதழ் பெறலாம்.. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!

whatsapp birth certificate

சென்னையில் வாட்ஸ் அப் மூலம் பிறப்பு சான்றிதழ் பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்..

பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கவும் தமிழக அரசு வாட்ஸ் அப் நிறுவனத்துட்ன் கைகோர்த்துள்ளது.. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இதற்கு முன்பு வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டுமெனில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனை தேடி செல்ல வேண்டிய நிலை இருந்தது.


இந்த நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக வாட்ஸ் அப் உடன் இணைந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது..

இந்த சூழலில் தற்போது சென்னையில் வாட்ஸ் அப் மூலம் பிறப்பு சான்றிதழ் பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வாட்ஸ் அப் மூலம் பெறூம் திட்டம் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.. பெற்றோர் 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தேவையான தகவல்களை அனுப்பி பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்.. பெற்றோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு PDF வடிவில் தானாகவே பிறப்புச் சான்றிதழ் தரப்படும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

வாட்ஸ் அப் மூலம் பிறப்பு சான்றிதழை எப்படி பெறுவது..?

பெற்றோர் தங்களது மொபைல் போனில் 94450 61913 என்ற சென்னை மாநகராட்சியின் பிரத்யேக வாட்ஸ் அப் உதவி மைய எண்ணை சேமித்து கொள்ள வேண்டும்..

அந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்-ல் Hi அல்லது Birth Certificate என தகவல் அனுப்பி தங்கள்து கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும்..

பெற்றோர் தங்களது விவரங்களை உள்ளிட்ட சில நொடிகளிலேயே அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு PDF வடிவில் பிறப்பு சான்றிதழ் தானாகவே அனுப்பி வைக்கப்படும்..

பொதுமக்கள் எந்த கட்டணமு இன்றி முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..

Read More : தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா..? தவெக அரசின் நிலைப்பாடு என்ன..? அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பதில்.!

English Summary

The Corporation Commissioner has announced that birth certificates can be obtained via WhatsApp in Chennai.

RUPA

Next Post

‘ராணுவ மோதல்களால் அனைத்தையும் தீர்க்க முடியாது.. இதுதான் ஒரே தீர்வு..’ பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்..!

Mon May 18 , 2026
Prime Minister Narendra Modi today once again emphasized that all wars must be resolved through dialogue and diplomacy.
pm modi in norway

You May Like