Flash : மீண்டும் ஷாக்.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..?

gold necklace from collection jewellery by person 1262466 1103

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, 1,18,960க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 120 உயர்ந்து ரூ.14,870-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, 1,18,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : AC Tips : ஏசியை எத்தனை மணி நேரம் இயக்கிய பிறகு, அதற்கு ஓய்வு அளிக்க வேண்டும்..? தெரிஞ்சுக்க இதை படிங்க..!

English Summary

In Chennai today, the price of ornamental gold rose by Rs. 960 per sovereign and is being sold at Rs. 1,18,960.

RUPA

Next Post

அடுத்த இடியை இறக்கிய Meta.. 8,000 ஊழியர்கள் வேலை இழக்க உள்ளனர்..! இழப்பீட்டுத் தொகுப்பு விவரம் இதோ..!

Tue May 19 , 2026
Meta is preparing for another large-scale round of layoffs.
meta layoff

You May Like