இந்தியாவின் ‘Gen-Z’ (இளம் தலைமுறை) பிரிவினரால் முன்னெடுக்கப்படும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (Cockroach Janta Party’ -CJP) நிறுவனரான அபிஜித் டிப்கே, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு “ஹேக்” (hack) செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனால் அதை அணுக இயலவில்லை என்றும் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார். மேலும், CJP-யின் மாற்று (backup) இன்ஸ்டாகிராம் கணக்கும் ‘Meta’ நிறுவனத்தால் நீக்கப்பட்டுவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியத் தலைமை நீதிபதியின் கருத்துகளுக்குப் பிறகு கட்சி பிரபலமடைந்தது
மே 15-ஆம் தேதியன்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” மற்றும் “ஒட்டுண்ணிகள்” என்று கூறியிருந்தார்.. அவரின் இந்த கருத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, இணையத்தில் மிக விரைவாகப் பிரபலமடைந்தது. வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்திருந்த சில சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அரசியல் வியூக நிபுணர் அபிஜித் தீப்கே என்பவரால் ‘Cockroach Janata Party’ தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே, இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்று, இந்த நையாண்டித் தளம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஏராளமான இளம் தலைமுறை, அத்துடன் சற்று முதிர்ந்த வயதுடைய சமூக ஊடகப் பயனர்கள் எனப் பல தரப்பினரின் ஆதரவையும் இது ஈர்த்தது.
நிறுவனர் ‘X’ தளத்தில் தகவல் வெளியிட்டார்
வெள்ளிக்கிழமையன்று ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு “ஹேக் செய்யப்பட்டுவிட்டது” என்று டிப்கே தெரிவித்தார். மற்றொரு பதிவில் அவர், “@Meta, எனது இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகும் வசதியை நான் இழந்துவிட்டேன். அதை மீட்டெடுக்க முயற்சிக்கிறேன், ஆனால் என்னால் இயலவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.



