12 நாட்களில் 30+ கொடூர குற்றங்கள்.. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. விஜய் அரசை விளாசிய உதயநிதி..!

vijay udhay 1

கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன் தினம் மாலையில் கடைக்கு சென்றார்.. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்..


இந்த சூழலில் சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் நேற்றிரவு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.. சிறுமி 2 பேரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உடல் முட்புதரில் வீசப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா..? என்பது உடற்கூராய்வின் முடிவில் தெரியவரும்.

இந்த சம்பவம் தொடர்பாக கார்த்தி, மோகன் ராஜ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை தொடர்ந்து கைதான மோகன் ராஜ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.. அவரை 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்..

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க – சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

மனித உடலால் எவ்வளவு அதிகபட்ச வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ள முடியும்..? சூரிய வெப்பம் நமது உடலை எவ்வாறு பாதிக்கிறது..?

Sat May 23 , 2026
When the temperature reaches between 45°C and 48°C, we usually refer to it as "unbearable heat."
Heatstroke

You May Like