காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு அக்குவேறு ஆணிவேறாக நீடித்து இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்திற்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணை கட்டும் (Mekedatu Dam) வஞ்சகச்செயல் ஆகும்.
அதனைத் தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது? காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்திற்கு மட்டுமான தனிப்பட்டச் சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் (Upper Riparian State) வாழ்பவர்களைவிட, கடைமடைப் பகுதியில் (Lower Riparian State) வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது மிக அதிக தார்மீக உரிமை உண்டு என்பதுதான் உலகளாவிய நதிநீர் பங்கீட்டு விதியாகும்.
அந்த நெறிமுறைகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிடத் தமிழ்நாட்டிற்குத்தான் அதிக சட்டபூர்வ உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் பேசும் டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் அசுர வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார். புதிய கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸைச் சேர்த்துக் கொண்டுள்ள தவெக, ஆட்சி அதிகாரத்திற்காகத் தமிழகத்தின் தார்மீக உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு அடகு வைக்கக் கூடாது.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் இந்த ஆணவப்பேச்சைத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாகக் கடுமையாகக் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் அசுர முயற்சிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாகத் தனது அதிகாரப்பூர்வத் தார்மீக எதிர்ப்பினைத் டாப் கியரில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read more: கேஸ் பயனர்களுக்கு முக்கிய அலர்ட்..! ஜூன் 30-க்குள் இதைச் செய்யாவிட்டால், மானியம் நிறுத்தப்படும்..!



