Flash : வாரத்தின் முதல் நாளே ஷாக்..! தங்கம் விலை அதிரடி உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?

Jewellery 1

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. 


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,780-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி உயர்ந்து ரூ.2.95 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : எபோலாவை சுகாதார அவசரநிலையாக அறிவித்த WHO..! எந்தெந்த நாடுகள் அதிக ஆபத்தில் உள்ளன..? இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும்..?

English Summary

In Chennai today, the price of gold has risen by Rs. 400 per sovereign and is being sold at Rs. 1,18,240.

RUPA

Next Post

"அவர் என் நண்பன்.. நான் அவரின் ரசிகன்.. எங்கள் உறவு மிகவும் வலுவானது!" மோடிக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த ட்ரம்ப்..!

Mon May 25 , 2026
Trump Dials Live During US Independence Day Event in Delhi, Says 'He Loves PM Modi, India Can Count on Him'
modi trump 1

You May Like