தவெகவில் இணைந்தார் இசக்கி சுப்பையா..! குதிரை பேரம் நடந்ததா..? பரபரப்பு பதில்..!

tvk esakki subbaiah

அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபடுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.. இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் நேற்றே அறிவித்திருந்தார்.


இந்த சூழலில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய வந்தார்… சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.. எனினும் அவர் தட்டச்சு செய்து கொண்டு வரப்பட்ட ராஜிமானா கடிதத்தை கொண்டு வந்ததால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை.. கையால் எழுதப்பட்ட கடிதத்தை கொடுக்க வேண்டும் என்பதே சட்டப்பேரவை விதி.. எனவே கைப்பட எழுதிய கடிதத்தை கொண்டு வரும்படி, சபாநாயகர் அறிவுறுத்தினார்.. அதன்படி, ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதிய அவர் சபாநாயகரிடம் அளித்தார்.. இதையடுத்து இசக்கி சுப்பையானவின் ராஜினா ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்..

இந்த நிலையில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா இன்று தவெகவில் இணைந்தார்.. சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலுகத்திற்கு சென்ற அவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார்..

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தொகுதி நலனுக்காகவே ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தேன்.. ஆளுங்கட்சியில் இருந்தால் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.. இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் தான் தவெகவில் இணைந்தேன்.. வேறு எந்த காரணமும் கிடையாது.. அதிமுக தலைமை மீது எவ்வளவோ குறைகள் உள்ளன.. தவெகவில் இணைந்து விட்டதால் குறைகள் சொல்ல தற்போது நான் தயாராக இல்லை..” என்று தெரிவித்தார்..

அப்போது செய்தியாளர்கள் குதிரை பேரம் குறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ எனக்கு குதிரையும் தெரியாது, பேரமும் தெரியாது.. குதிரை பேரம் செய்பவர்களுக்கு தான் குதிரை பேரம் பற்றி தெரியும்.. முதல்வர் விஜய் மீதான நல்லெண்ணம், நம்பிக்கையால் தவெகவில் இணைந்தேன்.. குதிரை பேரம் என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக சொல்லப்படும் குற்றச்சாட்டு.. யூகத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது.. குதிரையே தெரியாத என்னிடம் குதிரை பேரம் குறித்து கேட்டால் என்ன சொல்வேன்..” என்று தெரிவித்தார்..

விஜய் தலைமையிலான தவெக, தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக காட்டமாக விமர்சித்திருந்தது. மேலும் திமுகவும் குதிரை பேர அரசியலை கடுமையாக சாடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : பரபரப்பு..! திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்.. பதற வைக்கும் வீடியோ..!

RUPA

Next Post

“இதை ஏற்க முடியாது.. இது தவெகவின் எதிர்கால அரசியலுக்கு உகந்ததல்ல..” திருமா பரபரப்பு பேட்டி..!

Tue May 26 , 2026
Thirumavalavan has stated that it is unacceptable for AIADMK MLAs to resign from their posts and join the TVK.
Vijay and Thirumavalavan

You May Like