Flash : தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தீடீர் ராஜினாமா..! என்ன காரணம்..?

srinivasan

தமிழக சட்டப்பேரவை செயலலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கினார்..  கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டமன்ற செயலாளராக பணியாற்றி வருகிறார்..


கடந்த 2023-ம் ஆண்டு சீனிவாசன் பணி ஓய்வு பெற்ற நிலையில், 3 ஆண்டு காலம் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.. அந்த வகையில் வரும் நவம்பர் 30-ம் தேதி வரை பணியாற்ற அவருக்கு கால அவகாசம் உள்ளது. ஆனால் இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்..

தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் சீனிவாசன்.. இவர் தமிழ்நாட்டில் புதிதாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு, ஆட்சியின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தவெக அரசு பக்க பலமாக இருந்தார்..

மேலும் சட்டசபை விதிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் சீனிவாசன் வழங்கி இருந்தார்.. இந்த சூழலில் தான் புதிய அரசுக்கும் சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.. அவரின் இந்த ராஜினாமா தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

RUPA

Next Post

தலைவலியை சாதாரணமாக எடுத்துக்கிறீங்களா..? அப்ப, இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தெரிஞ்சுக்கோங்க..!

Tue Jun 2 , 2026
சமீப காலங்களில், வயது வித்தியாசமின்றி பலரிடையே உயர் இரத்த அழுத்தப் (High BP) பிரச்சனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு குறிப்பாக இளைஞர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இருப்பினும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது ஏற்படும் அடிப்படை அறிகுறிகளைப் பலரால் அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. இவர்களில் பெரும்பாலோர் அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகின்றனர்.. ஆனால், அதைச் சாதாரண உடல் சோர்வு, அலுவலக வேலைப்பளு அல்லது தூக்கமின்மை ஆகியவற்றால் ஏற்பட்டது என்று கருதிப் […]
mn when to see a neurologist for a headache

You May Like