சமீபத்தில் நடந்து முடிந்த நார்வே செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார்.. இதன் மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். போட்டியின் ஆரம்ப சுற்றுகளில் பின்தங்கியிருந்தாலும், இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி, ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார்.
உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், வெஸ்லி சோ, மற்றும் இந்தியாவின் தற்போதைய உலக சாம்பியன் டி. குகேஷ் போன்ற உலகின் தலைசிறந்த கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்ற இந்த தொடரில், பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தலைவர்களும் விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்..
இந்த நிலையில் நார்வேயில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில், பிரக்ஞானந்தா, முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.. பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையையும் வழங்கினார்..
பின்னர் பிரக்ஞானந்தா உடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடினார்.. முதல்வரின் மேடையிலேயே செஸ் விளையாடினார்.. இந்த சந்திப்பின் போது பிரக்ஞானந்தாவின் பெற்றோர், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்..
Read More : முதுகில் குத்திய காங்கிரஸ்.. ராகுலை விமர்சித்து உதயநிதி போட்டோவுடன் டெல்லியில் பேனர்..!



