முதுகில் குத்திய காங்கிரஸ்.. ராகுலை விமர்சித்து உதயநிதி போட்டோவுடன் டெல்லியில் பேனர்..!

rahulgandhi banner

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை இன்று நடைபெறுகிறது.. டெல்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 2029 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..


நீட் வினாத்தாள் கசிவு, எரிபொருள் விலை உயர்வு போன்ற தேசிய பிரச்சனைகளில் மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடியை உருவாக்குவது உள்ளிட்ட யூகங்கள் குறித்தும் ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.. ஆம் ஆத்மி கட்சியும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது..

இதனிடையே இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.. எனினும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம் என தெளிவுப்படுத்தி உள்ளனர்..

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் டெல்லியில் ராகுலை விமர்சித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.. காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.. காங்கிரஸ், ராகுலுக்கு எதிரான கூட்டணி கட்சிகள் கடந்த காலங்களில் சொன்ன விஷயங்கள் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன..

திமுக கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்ட நிலையில் உதயநிதி படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.. 20 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து முதுகில் குத்திவிட்டு சென்றதாக உதயநிதி கூறியது போன்ற வாசகம் பேனரில் இடம்பெற்றுள்ளது.. இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருவருக்கொருவர் எதிரான மனநிலையை கொண்டவர்கள் என பேனரில் விமர்சனம் செய்துள்ளனர்.. உதயநிதி, மம்தா, பினராயி, கெஜ்ரிவால் உள்ளிட்டோரின் ராகுல் குறித்த விமர்சனங்கள் பேனராக வைக்கப்பட்டுள்ளன..

Read More : மீண்டும் போர்.. போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு முதல் முறையாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்..!

RUPA

Next Post

1 டிரில்லியன் டாலர்..! டிரில்லியன் அதிபர் அந்தஸ்தை எட்டும் முதல் நபராக மாறப்போகும் எலான் மஸ்க்..!

Mon Jun 8 , 2026
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், இதுவரை எந்தவொரு தனிநபரும் எட்டாத ஒரு மைல்கல்லை விரைவில் அடையக்கூடும். தற்போதைய கணிப்புகள் உண்மையானால், இந்த பில்லியனர் தொழில்முனைவோர் உலகின் முதல் ‘டிரில்லியன்’ டாலர் சொத்து மதிப்புடையவராக (trillionaire) மாறக்கூடும். ஒரு டிரில்லியன் டாலர் சொத்து என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிலான செல்வச் செழிப்பைக் குறிப்பதோடு, மஸ்க்கை ஒரு தனித்துவமான நிதி நிலைக்கு உயர்த்தும். தற்போதைய நாணய மாற்று விகிதங்களின்படி, 1 […]
elon musk 2

You May Like