Breaking : இன்ப அதிர்ச்சி..! 2 நாட்களில் ரூ.5,600 குறைந்த தங்கம் விலை..! நகை வாங்க காத்திருந்தவர்கள் ஹேப்பி..!

Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை 2 நாட்களில் ரூ.5,600 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.60 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : 30% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியை நீக்கிய மத்திய அரசு..! உங்கள் எரிபொருள் செலவு குறையுமா..?

English Summary

In Chennai today, the price of ornamental gold has dropped by ₹2,400 per sovereign, and it is being sold at ₹1,08,000.

RUPA

Next Post

“திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர்..” பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி..!

Thu Jun 11 , 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. ஸ்டூடியோக்களில் இருந்த சினிமாவை கிராமத்து மண் வாசனைக்கு மாற்றியவர்.. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் […]
bharathiraja modi

You May Like