அடுத்த அதிரடி!. நீட் தேர்வுக்கு எதிராக இன்று பேரவையில் தீர்மானம்!.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசின் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்திற்கு (FCRA) எதிராகவும் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முக்கியத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன. இவற்றுடன் சேர்த்து, நடப்பு கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்களான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களும் இன்றைய பேரவைக் கூட்டத்தில் நடைபெறுகின்றன.


மருத்துவக் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வருகிறார். இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உரையாற்றிய பிறகு, பேரவையில் இது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, மத்திய அரசின் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகன் மற்றொரு அரசுத் தீர்மானத்தைப் பேரவையில் தாக்கல் செய்கிறார். இத்தீர்மானங்களைத் தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மாநிலத்தின் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விரிவான விவாதங்களும் இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் நடைபெறவுள்ளன.

1newsnationuser5

Next Post

ஆஹா... இனி ஏடிஎம்மில் பணம் மட்டுமல்ல... ரேஷன் பொருட்களும் கிடைக்கும்!. இந்தியாவில் புதிய வசதி!

Tue Aug 11 , 2026
சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தை நவீனப்படுத்தி, மக்களுக்கு எளிதில் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் வகையில், அம்மாநில அரசு ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ என்ற புதிய வசதியை ராய்ப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதைப் போல, ரேஷன் அட்டைதாரர்கள் இனி மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையின்றி, 24 மணி நேரமும் தங்களுக்குத் தேவையான தானியங்களை இச்சேவை மூலம் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். சுமார் 2,500 கிலோ […]
Chhattisgarhatmration

You May Like