Breaking : “அரசியலுக்கு வருகிறேன்.. எனக்கு நெருக்கமான ஒருவருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்..” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..!

raghava lawrence

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உங்கள் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிப்பதிலோ அல்லது பதவியை அடைவதிலோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை.


நான் பெரிதும் மதிக்கும் மற்றும் எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து நின்று, தனிப்பட்ட முறையில் நான் செய்து வந்ததை விட பெரிய அளவில் சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது. தற்போதைய என்னை அரசியலில் ஈடுபட வேண்டிய ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

இன்று காலை 10:00 மணிக்கு நான் பகிர உள்ள வீடியோவில், அரசியல் குறித்த எனது புரிதல், அது என் வாழ்வில் எப்படி வந்தது, அரசியல் குறித்த என் தாயாரின் பார்வை மற்றும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து, என் மனதிலிருந்து முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பேசியுள்ளேன்.

இந்த வீடியோவை இறுதிவரை பார்த்து, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன் நான் இந்த முக்கியமான அடியை எடுத்து வைக்கும்போது, ​​உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

ஒரு நடிகர் அரசியலிலும் உச்சத்தை எட்ட முடியும் என்பதை முதன்முதலில் நிரூபித்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.. அதன்பின்னர் பல்வேறு நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை.. நடிகர் விஜயகாந்த் அரசியலில் நுழைந்த போது அவருக்கு வரவேற்பு இருந்தாலும் அவரால் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி வரை மட்டுமே அடைய முடிந்தது..

ஆனால் சமகால அரசியலில், ஒரு நடிகர் அரசியலில் உச்சத்தை தொடடலாம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் விஜய்.. எம்.ஜி.ஆர். சாதிக்காத பல விஷயங்களை கூட முதல் தேர்தலலியே விஜய் சாதித்துள்ளார்.. விஜய்யின் இந்த அரசியல் வெற்றி ராகவா லாரன்ஸிற்கும் உத்வேகம் அளித்திருக்கலாம்..

இதனிடையே அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி We the Leader என்ற இயக்கத்தின் வாயிலாக மக்களை ஒன்றிணைத்து முறையான கட்டமைப்புடன் கட்சியாக மாற முடிவு செய்துள்ளார்..

எனவே ராகவா லாரன்ஸ் விஜய், அண்ணாமலை என இருவரில் ஒருவருடன் இணைந்து செயல்படுவார் என்று கூறப்பட்டது.. அதன்படி அண்ணாமலை தொடங்கிய புதிய கட்சியில் ராகவா லாரன்ஸ் இணைய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த சூழலில் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது..

Read More : Flash : சில்லறை விற்பனை நிலையங்களில் மொத்தமாக பெட்ரோல், டீசல் வாங்க தடை.. மத்திய அரசு அதிரடி..!

RUPA

Next Post

Flash : மீண்டும் ஷாக்.. இன்று ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை..! ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்..!

Fri Jun 12 , 2026
In Chennai today, the price of jewelery rose by Rs 2,400 to Rs 1,10,400.
Gold jewellery 1 1

You May Like