அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான விமானம் AN-32 வகையைச் சேர்ந்தது என்றும், அது ரோரியா (Rowriah) விமானப்படை தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
AN-32 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், மேல் அசாமில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விமானப்படைத் தளத்திற்கு அருகிலேயே விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான அந்த விமானத்தின் விமானி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமானத்தில் இருந்த மற்ற பணியாளர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அசாமின் ஜோர்ஹட் விமானப்படை தளத்தில், தரையிறங்கும்போது ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம், சரக்குகளைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் AN-31 ரகத்தைச் சேர்ந்ததாகும்.
விமானப்படை தளத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் விசாரணைப் பணிகள் நடைபெற்று வருவதால், கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன” என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு அவசரக்கால மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.. விபத்துக்குப் பிறகு ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் நிலவிய சூழலைப் படம்பிடிக்கும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. விபத்து நடந்த இடத்திலிருந்து புகை வெளியேறுவதைக் காண முடிவதோடு, அதிகாரிகள் மீட்புப் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.
விபத்துக்குப் பிறகு விமானத்தில் தீப்பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதிகாரிகள் விபத்துக்கான சூழலை ஆய்வு செய்து வருகின்றனர்.. விபத்துகான காரணம் குறித்தும் விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : உணவில் உலோக Pin இருக்கா..? வணிக நிறுவனங்களுக்கு FSSAI அவசர எச்சரிக்கை..! மீறினால் கடும் நடவடிக்கை..!



