Flash : பல முறைகேடுகள், விதிமீறல்கள்.. முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு..!

vijay inigo

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..


பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில் நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியை தழுவி இருந்தார்.

இந்த நிலையில் திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.. அவர் தனது மனுவில் “ 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை வைத்து விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ளதை வேட்புமனுவில் மறைத்துள்ளார்.. ரூட் சமூகவலைதளம் மூலம் பிரச்சாரத்திற்கு எவ்வளவு செலவு செய்தார் என்ற விவரங்களை இதுவரை தெரிவிக்கவில்லை..

கட்சி அடையாளங்களை அணிந்து சென்று முட்டிப்போட்டு தேவாலயத்தில் விஜய் பிரச்சாரம்.. தான் தாக்கல் செய்துள்ள தேர்தல் வழக்கு முடியும் வரை திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது.. பல விதி மீறல், முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்..” என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கில் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததால், தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும்..” என்றும் இனிகோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்..

Read More : ” 2 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை.. எவ்வளவு பெரிய வெட்கக்கேடு..? பதவி விலகுங்கள் ஜோசப் விஜய் அவர்களே..” நயினார் விளாசல்..!

RUPA

Next Post

'என்னை விட்டுவிடுங்கள்': பாலியல் வன்கொடுமை, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக IAF அதிகாரி மனைவி பரபரப்பு புகார்..!

Tue Jun 16 , 2026
நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட 24 வயதுப் பெண் ஒருவர் தனது கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.. போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும், ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதாகவும், பின்னர் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மதகுருவான முக்கியக் குற்றவாளி, அப்பெண்ணைத் தனது விருப்பத்திற்கு மாறாகத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் […]
nagpur conversion case 1781599128 1

You May Like