Breaking : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.1,040 குறைந்த தங்கம் விலை.. வெள்ளி ரூ.5,000 சரிவு..!

gold coins gold jewellery floor background 181203 24090 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது… அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.130 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 1,040 குறைந்து ரூ.1.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது… அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.265 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2.65 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. 

Read More : அலர்ட் மக்களே.. LPG சிலிண்டர் முன்பதிவு முதல் விலை வரை.. மே 1 முதல் புது ரூல்ஸ்..!

RUPA

Next Post

ஹோர்முஸ் விவகாரம்.. ஈரானின் நிபந்தனைக்கு "NO" சொன்ன அமெரிக்கா..! சர்வதேச அரசியலில் மீண்டும் பதற்றம்..

Tue Apr 28 , 2026
US rejects Iran's 'conditional' plan to reopen Strait of Hormuz as second round of talks hit impasse
iran 25 1777338527 1 1 1 1

You May Like