கோயில் வளாகங்களில் உள்ள கடைகளில் பூஜை பொருட்களின் விலை பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.. இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் “ அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்..
சுத்தமான தரமான பொருட்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும்.. பூஜை பொருட்களின் விலை பட்டியலை பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும்..
நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.. பிளாஸ்டிக் பைகளில் பூஜைப் பொருட்களை அடைத்து விற்பனை செய்யக் கூடாதும். மஞ்சள் துணிப்பையை மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.. பக்தர்கள் கேட்காத பொருட்களை வாங்க சொல்லி கடைக்காரர்கள் வலியுறுத்தக் கூடாது.. கோவிலுக்கு வெளியே வழித்தடங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பூஜைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.. கடைகள் சுற்றியும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்..! தவெக எம்.எல்.ஏக்கள் 10 பேர் போர்க்கொடி..! விஜய்க்கு புதிய சிக்கல்..!



