நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.. முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து..!

CM Vijay 2026

தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவரது பிறந்தநாளை தவெகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..


அந்த வகையில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்க பதிவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

தமிழக முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

இந்தியாவின் 3-வது பணக்கார முதல்வர்..! CM விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..! ஷாக் ஆகாம படிங்க..!

Mon Jun 22 , 2026
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதன் மூலம் அரசியல் தலைவராக மாறினார்.. விஜய்யின் தவெக கட்சி களம் கண்ட முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றது.. எனினும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.. கடந்த மாதம் 10-ம் தேதி தவெக விஜய் முதல்வராக […]
cm vijay n 4

You May Like