“அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீங்க.. மக்கள் மனதில் இருக்கிறேன்..” முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி..!

vijay stalin 2

நேற்று முன் தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் நேற்று பதிலுரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் முதல்வர் விஜய் குட்டிக் கதை ஒன்றை சொன்னார்.. “ வெயிலில் நின்றபடி எதையோ தேடி கொண்டிருந்த ஒரு வயதான நபரிடம் ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் என்று கேட்க “ உங்க அப்பா இங்க தான் இருப்பாருன்னு சொன்னாங்க.. அதான் தேடிகிட்டு இருக்கேன்.. எங்க உங்க அப்பாவையே காணோம்..” என்று சொன்னாராம்.. எங்களுக்கும் இதே போல் நக்கல், நையாண்டியாக, சம்மந்தம் சம்மந்தம் இல்லாத குட்டிக்கதை எல்லாம் பேச தெரியும்..” என்று கூறினார்..


முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை மறைமுகமாக குறிப்பிட்டே, முதல்வர் விஜய் நக்கலாக விமர்சித்திருந்தார்.. மேலும் விஜய்யின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உங்க மனைவி பிள்ளைகள் எங்கே என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்..

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.. திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின் “ நேற்று முன் தினம் சட்டமன்றத்தில் ஒரு காட்சி நடந்தது.. நாட்டில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது.. ஒரு பக்கம் மின் வெட்டு பிரச்சனை, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிட முடியவில்லை என்ற சூழல் உள்ளது.. 2021-ல் நான் ஆட்சிக்கு வந்த போது ஒவ்வொரு ஆண்டும் குறித்த நேரத்தில் தண்ணீரை திறந்து வைத்துள்ளோம்.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக எடுத்து சொல்லி, முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டார்..

ஆனால் முதல்வர் உங்க அப்பாவை காணோம் என்று பதில் சொன்னார். அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீங்க.. மக்கள் மனதில் பதித்துள்ளேன், அது போதும். நீங்க தேடும் இடத்தில் நான் இருக்கமாட்டேன்.. மக்கள் தேடும் இடத்தில் நிச்சயம் முதல் ஆளாக இருப்பேன். நான் சட்டமன்றத்தில் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன்.. நான் அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. 60 ஆண்டுகளாக மக்கள் மன்றத்தில் இருக்கிறேன்.. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காக பணியாற்றுபவர்கள் தான் திமுகவினர்..

நான் முதல்வராக இருந்த 5 ஆண்டுகளில் நான் நடத்தின மாதிரி எந்த முதலமைச்சரும் ஆய்வுக்கூட்டம் நடத்தி இருக்கமாட்டார்கள்.. நான் பயணம் செய்த மாதிரி எந்த முதலமைச்சரும் பயணம் செய்திருக்க மாட்டார்கள்.” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்..! வெள்ளை அறிக்கையில் ஷாக் தகவல்..!

Thu Jun 25 , 2026
தமிழ்நாடு மின் துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கையில் வெளியிட்டார்.. 25 ஆண்டுகள் மின் துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மின் துறையில் 2001 முதல் 20026 வரை ரூ.8,355 கோடி நஷ்டம், 2006 முதல் 2011 வரை ரூ.35,463 கோடி நஷ்டம். மின் துறையில் 2011 முதல் 2016 வரை ரூ.56,361 […]
nirmal kumar

You May Like