அமைச்சர் நிர்மல் வெளியிட்ட வெள்ளை அறிக்கை.. நாங்க எதுவுமே செய்யலயா..? பொங்கி எழுந்த செந்தில் பாலாஜி..!

Senthil Balaji 2025

தமிழ்நாடு மின் துறை நிலை குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கையில் வெளியிட்டார்.. 25 ஆண்டுகள் மின் துறையின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அவர் அறிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ மின் துறையில் 2001 முதல் 20026 வரை ரூ.8,355 கோடி நஷ்டம், 2006 முதல் 2011 வரை ரூ.35,463 கோடி நஷ்டம்.


மின் துறையில் 2011 முதல் 2016 வரை ரூ.56,361 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. 2016 முதல் 2026 வரை ரூ.58,534 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மின் துறையில் 2021-ம் ஆண்டு முதல் 2026 வரை ரூ.34,447 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் மொத்த கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது.

மின்சாரத்துறையில் புதிதாக எதுவும் செய்யவில்லை.. ஆனால், ரூ.51,000 கோடி செலவுகள் அதிகமாகி உள்ளது.. மின்சார துறையில் புதிதாக டிரான்பார்ம்ர்கள் வாங்கவில்லை, முந்தைய ஆண்டுகளில் செய்ததை தான் செய்துள்ளனர்.. புதிதாக் அஎதுவும் செய்யாமல் எப்படி செலவுகள் அதிகமானது..? கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் 343 பேரை மட்டுமே வேலைக்கு எடுத்துள்ளனர்..” என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ மின் துறையை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கி துறையை காப்பாற்றியவர் மு.க. ஸ்டாலின். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் வேளையிலும் சீரான மின்சாரம் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை 3 முறை உயர்த்தியும் வருவாய் பற்றாக்குறை ரூ.58,000 கோடியாக இருந்தது..

ஆனால் திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.34,443 கோடி தான் இது அதிமுக ஆட்சி காலத்தை விட ரூ.24,000 கோடி குறைவு. நலிவடைந்த மின்சாரத்துறையை மேம்படுத்த மு.க. ஸ்டாலின் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.. கடந்த 5 ஆண்டுகளில் 4.97 லட்சம் கோடி அளவுக்கு மின் துறையில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டது. மின் துறையை மேம்படுத்தி உற்பத்திய அதிகரிக்க நிதி ஒதுக்கி துறையை காப்பாற்றியவர். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிக்கும் வேளையிலும் சீரான மின்சாரம் கொடுத்தோம்.

மின்சாரத்துறையில் எவ்வளவு வருமானம், எவ்வளவு செலவினம் இருந்தது என்று காட்டியவர்கள், எந்தெந்த வகையில் அந்த வருமானம் வந்தது..? எந்தெந்த வகையில் செலவுகள் இருந்தது.. இது வெள்ளை அறிக்கையில் இருந்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.. திமுக ஆட்சியில் 5 ஆண்டுகள் செய்த திட்டங்களை அதில் பட்டியலிட்டுள்ளனர்..

இருந்தாலும், தவெக அரசுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.. அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக 5 ஆண்டுக்கு ரூ.75,000 கோடி வட்டி கட்டி இருக்கிறோம். திமுக ஆட்சியில் ரூ.1500 கோடி வட்டியை குறைத்துள்ளோம்.

கடந்த 5 ஆண்டுகளில் 122 துணை மின் நிலையங்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தான் பணி ஆணை வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தான் இப்போது பணி வழங்கி உள்ளனர்.

தேர்தல் வரவில்லை என்றால் நாங்கள் பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்போம்.. 90,000-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்ஃபார்கள் அமைத்திருப்பதாக அமைச்சர் நிர்மல் குமாரே ஒப்புக்க்கொண்டார். அனைத்தும் வெள்ளை அறிக்கையிலேயே உள்ளது, ஆனால் எதுவும் செய்யவில்லை என்கிறார் அமைச்சர்.” என்று தெரிவித்தார்.

Read More : “முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்.. Wait பண்ணுங்க மக்களே..” விஜய்யை பங்கம் செய்த அதிமுக ஐடி விங்..!

RUPA

Next Post

இந்தியர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு இண்டர்நெட் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்..!

Thu Jun 25 , 2026
Interesting information has emerged regarding how much internet data (in GB) Indians use per day.
high speed internet 11zon

You May Like