Flash : ஒரே நாளில் 2 முறை உயர்வு.. நகைப்பிரியர்கள் தலையில் இடியை இறக்கிய தங்கம் விலை..!

jewels nn

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சூழலில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் மீண்டும் ரூ.640 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.160 உயர்ந்து ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,40-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை 2 நாட்களில் மட்டும் ரூ.3,360 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : நீங்கள் கிரெடிட் கார்டு மோசடிக்கு ஆளானவர்களா? 5 நாட்களுக்குள் முழுத் தொகையும் திரும்பப் பெறலாம்.. RBI-ன் புதிய விதி..!

RUPA

You May Like