6 மாதங்களில் 554 கணவர்கள் பலி.. வெளியான அதிர்ச்சி சர்வே!!

Dead Body 11zon

இந்தியாவில் திருமண உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள், குடும்பத் தகராறுகள் மற்றும் திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் தொடர்பான குற்றச் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன. குறிப்பாக, திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் காரணமாக கணவன் அல்லது மனைவி உயிரிழக்கும் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.


சமீப மாதங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணால் திட்டமிட்டு மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது காதலரின் உதவியுடன் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் குடும்ப உறவுகளில் நம்பிக்கையின்மை மற்றும் தனிப்பட்ட மோதல்கள் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

அதேபோல், திருமணத்திற்கு வெளியேயான உறவுக்கு கணவன் தடையாக இருப்பதாகக் கருதி, காதலருடன் இணைந்து கணவரைக் கொலை செய்ய முயற்சித்தது அல்லது கொலை செய்தது தொடர்பான பல வழக்குகளும் அண்மைக் காலமாக பல்வேறு மாநிலங்களில் பதிவாகி வருகின்றன. சில சம்பவங்களில் விபத்து, தற்கொலை அல்லது காணாமல் போனது போல நாடகமாடி குற்றத்தை மறைக்க முயன்றதும், பின்னர் போலீஸ் விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் 554 கணவர்கள் கொலை அல்லது தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்ட 322 கணவர்களில் 194 பேர் மனைவியின் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல், நீண்ட நாள் குடும்பத் தகராறில் 232 கணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 57 பேர் மாமனார் மற்றும் மனைவியின் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் என சொல்லப்பட்டிருக்கிறது.

Also Read: ரூ.15 ஆயிரத்திற்கு கட்டுவிரியன் பாம்புகளை வாங்கிய பெண்; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Saranya

Next Post

"நான் உன்னோட பொண்டாட்டிய லவ் பண்றேன்" செல்போன் மெசேஜால் அம்பலமான இன்ஸ்பெக்டரின் ரகசிய லீலைகள்!

Mon Jul 20 , 2026
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் வசித்து வருபவர் 53 வயதான ஹரிஷ் மாதவ்ராவ் கட்டாவ்கர். துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இவருக்கும், தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், மே மாதம் 2025-ல் ஹோட்டல் வேலை மற்றும் வீட்டின் இன்டீரியர் பணிகளை காட்டுவதாகக் கூறி அவர் ஆசிரியையை தனது வீட்டிற்க்கு அழைத்துள்ளார். இத்தனை நம்பிய ஆசிரியையும், அவருடன் சென்றுள்ளார். ஆனால் அங்கு […]
2058065719ad5121b6783fe1ce5cb6c7

You May Like