லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்கிய ‘DC’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

DC

கோலிவுட் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ஹீரோவாக களமிறங்கிய ‘DC’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் , ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



லோகேஷ் கனகராஜ் குறும்படங்கள் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். அடுத்ததாக அல்லு அர்ஜூனுடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமான ஆக்க்ஷன் படம் இயக்கவுள்ளார்.


இந்நிலையில் இயக்குனராக மட்டுமல்லாமல் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும்,பஅனிருத்ரவிச்சந்தர் இசையமைப்பிலும், அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ‘DC’ திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக வமிகா கப்பி நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி திரைஅயரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பின்னணி இசை ஏற்கனவே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Also READ:ஊர் பெரியவர்கள் முன்னிலையில், மனைவிக்கு கணவன் செய்த காரியம்!!

maha

Next Post

பெண் குழந்தையின் பெற்றோர்களா நீங்கள் ..! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை ..!

Thu Jul 2 , 2026
பெண் குழந்தையின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றக்கட்டமாக அமைவது முதல் மாதவிடாய். இது ஒரு இயல்பான உடல் வளர்ச்சி நிகழ்வு மட்டுமல்ல; உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாகும். இந்த கட்டத்தில் குழந்தைகள் குழப்பம் அல்லது பயம் உணர வாய்ப்பு உள்ளது. அதனால், பெற்றோர் முன்கூட்டியே தயார் செய்து, சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். மாதவிடாய் திடீரென வருவதில்லை, பொதுவாக 10–15 வயதுக்குள் தொடங்கும். சராசரி […]
Parents FirstPeriod 2

You May Like