சீரியல் நடிகையிடம் ஆபாசமாக பேசிய வாட்டர் மெலன் ஸ்டார்..? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது இதுதான்!! கிழி கிழினு கிழித்த மா.கா.பா ஆனந்த்..

ma ka pa anandh 1

வாட்டர் மெலன் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் கொடுத்து கொண்டவர் திவாகர். இவர் ஒரு பிசியோதெரபி மருத்துவர். சமூக வலைதளங்களில் சிவாஜி, தனுஷ், சூர்யா போல் நடித்துக் காட்டி ட்ரோலில் சிக்கினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பிரபலமும் ஆனார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


சில தினங்களுக்கு முன்பு விஜய் டிவி பிரபலங்கள் தன்னை தாக்கியதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது கானா வினோத்தும், புகழும் வேண்டுமென்றே என்னிடம் வம்பிழுத்து என்னை தாக்கினர். அவர்களை தடுக்கவேண்டிய மா.கா.பா ஆனந்த் செம போதையில் இருந்தார்.. அவரும் அவர்களோடு சேர்ந்துகொண்டு ஒரு இரும்பு ராடால் என் காலில் தாக்கினார்.

இதனால் எனக்கு ரத்தக்கட்டு ஏற்பட்டது.. எனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். போலீசார் அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். என் வளர்ச்சியின் மீதுள்ள பொறாமையில்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள். கானா வினோத் என் குடும்பத்தை பற்றி இழிவாக பேசினார்.. இதை நான் தட்டி கேட்டபோது அவர் என்னை தாக்கினார்.. புகழும் போதையில் இருந்தார்.. மா.கா.பா ஆனந்த் எப்போதுமே போதையில்தான் இருக்கிறார் என்னெல்லாம் கூறியிருந்தார்.

அதன் படி மா.கா.பா ஆனந்த், கானா வினோத், புகழ், அன்சர் ஆகியோர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். மா.கா.பா. ஆனந்த் பேசுகையில், “படப்பிடிப்பு தளத்தில் அவர் ஆபாசமாகவும் சில விஷயங்கள் செய்தார். அதனால் தொலைக்காட்சி நிறுவனம் அவரை வெளியே அனுப்பியது. இதே போல் வேறொரு நிகழ்ச்சியில் ஒரு சீரியல் நடிகையிடம் இழிவான முறையில் அவர் பேசினார். அதன் பிறகு அவரை சேனல் தரப்பு வெளியேற்றியது.

அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு பெண்ணிடம் இழிவாகப் பேசினார். அவரை நிகழ்ச்சியில் இருப்பவர்கள் கேள்வி கேட்டனர். மற்றபடித் தாக்குதல் செய்யவில்லை. இதுதான் நடந்தது. அவர் கண்டெட்டுக்காக இதை செய்கிறார். அவரை நாம் ஆதரிக்கக்கூடாது. 18 மணிநேரம் நின்று வேலை பார்ப்பேன். மது அருந்தியிருந்தால் எப்படி அவ்வளவு நேரம் நிற்க முடியும்” என்றார்.  

Subscribe to my YouTube Channel

Read more: Walking| 3:3 ஃபார்முலா.. வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி செய்தாலே போதுமே.. ஆரோக்கியம் நீளும்..!

English Summary

Water Melon star who spoke obscenely to serial actress..? This is what happened at the shooting spot!! – M.K.A. Anand g

Next Post

ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 2 ரூபாய் தான்.. சர்வதேச சந்தையில் விலை ஏறினாலும்.. இந்த நாட்டுக்கு நோ டென்ஷன்..!

Wed Apr 15 , 2026
A liter of petrol costs just 2 rupees.. Even if the price rises in the international market.. there is no tension for this country..!
IOC e1615225925787 1

You May Like