உங்க உடல் எடையை சட்னு குறைக்கணுமா? அப்போ இதை சாப்பிட்டு பாருங்க… வித்தியாசம் உங்களுக்கே தெரியும்!

loss weight 1

உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? ஆனால் அதை எப்படிச் செய்வது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இதனால் சிலர் அதிக பணம் செலவிட்டு பல விதமான பவுடர்களை வாங்கி பயன்படுத்துவார்கள் அல்லது ஜிம்முக்கு சென்று தேவையற்ற செலவுகளைச் செய்வார்கள்.


ஆனால் உண்மையில், நம் வீட்டிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை.

பலரும் உடல் எடையை குறைக்க பல்வேறு முறைகளை முயற்சி செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் அவை பல நேரங்களில் எதிர்பார்த்த பலனை தராமல் போயிருக்கும். அத்தகைய சூழலில் இயற்கையான உணவுப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட எளிய சமையல் முறைகள் நல்ல மாற்றாக இருக்கும். அதில் ஒன்றாக கொள்ளு சட்னி குறிப்பிடப்படுகிறது. இதை சரியான முறையில் தயாரித்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவக்கூடும்

முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு சேர்த்து வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் பூண்டு, வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பின் வறுத்த கொள்ளு, புளி, தேங்காய் துருவல், பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த அனைத்து பொருட்களையும் சிறிது ஆறவைத்த பிறகு மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கடுகு, எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து விட வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் கொள்ளு சட்னி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

Also Read: அட நம்ம விஜய் கூட நடிச்சவங்களா இவங்க? அடையாளமே தெரியாமல் மாறிய 90ஸ் க்ரஷ்!

Saranya

Next Post

தமிழ் நாட்டிற்கு வரப்போகும் பேராபத்து.! வறட்சியா..புயலா..என்ன செய்ய காத்திருக்கு "எல் நினோ"..?

Fri Jul 3 , 2026
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. இதனால் தமிழ் நாட்டிற்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மற்றும் காற்று அழுத்த மாற்றங்களால் உலகளாவிய வானிலை முறைகளை மாற்றியமைக்கும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். இது பொதுவாக 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. பசிபிக் பெருங்கடலில் […]
elnino effect

You May Like