தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் தவெக ஆட்சி அமைத்தது..
கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றா.. அவருடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் நேற்று சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றார்.. தவெகவுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்ததால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு தப்பியது.. இதையடுத்து தவெக அரசு அமைய வாக்களித்த அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் விஜய் நன்றி தெரிவித்தார். மேலும் முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கியமான நலத்திட்டங்கள் தொடரும் என்று விஜய் அறிவித்திருந்தார்..
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கான ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.. முந்தைய திமுக ஆட்சியில் அரசு பள்ளியில் படித்து, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது.. இந்த சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பணம் வரவு வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இன்று மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது..
இந்த சூழலில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வந்தது.. அந்த வகையில் நாளை மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இதுகுறித்து முதல்வர் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது..



