புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி அடுத்த திருமுருகப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலாஜி. கூலித்தொழிலாளியான இவருக்கு 9 வயதான திருமேனிநாதன் (எ) கருப்பன்ஜி என்ற மகன் உள்ளார். சிறுவன், நெடுவாசல் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுவன் வழக்கம் போல் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளான்.
ஆனால் வெகுநேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தனது உறவினர்களுடன் சேர்ந்து சிறுவனை தேடியுள்ளனர். அப்போது, சிறுவன் அப்பகுதியில் உள்ள குளத்தில் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளான். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடகாடு போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 17வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவன், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளான். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், அவனிடம் கிடுக்குப்பிடு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் அவன், 9 வயதான திருமேனிநாதனை அந்த பகுதியில் உள்ள வயல் பகுதிக்கு அழைத்து சென்றதோடு ஓரின சேர்க்கையில் ஈடுபடுமாறுவற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் இதற்கு மறுத்துள்ளான். மேலும், இதுபற்றி பெற்றோரிடம் தெரிவிக்கப்போவதாக கூறி தப்பிக்க முயன்றுள்ளார். சிறுவனை தப்ப விட்டால் தனது பெற்றோரிடமும் கூறிவிடுவான் என்ற பயத்தில், அவன் அந்த பகுதியில் கிடந்த நைலான் கயிற்றால் திருமேனிநாதனை நெரித்து கொலை செய்துள்ளான்.
மேலும், எதுவும் நடக்காத போல் கிராம மக்களோடு சேர்ந்து சிறுவனை தேடுவது போல் நடித்துள்ளான். இதனால் அதிர்ந்துப்போன போலீசார் உடனடியாக பிளஸ்2 மாணவனை கைது செய்து, புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read: பெற்றோர்களே எச்சரிக்கை!!! அதிக உணவு சாப்பிட்டதால் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..



