“அவ என்னோட பொண்டாட்டி டா!” ஆத்திரமடைந்த கணவன், டாஸ்மாக் கடையில் நடந்த கொடூரம்..

WhatsApp Image 2026 07 05 at 3.24.32 PM

நண்பரின் மனைவியுடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படும் தொழிலாளி மீது டாஸ்மாக் பாரில் கல்லால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ஈரோடு வெண்டிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் 26 வயதான கோபிநாத். தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவருக்கு, ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெண்டிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்த விவேக் (29) என்பவரின் மனைவிக்கும் கோபிநாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரின் பழக்கம் குறித்து விவேக்கிற்கு தெரியவரவே, அவர் தனது நண்பன் கோபிநாத்தை எச்சரித்துள்ளார்.

பல முறை எச்சரித்தும், கோபிநாத் கேட்க்காமல் விவேக் மனைவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விவேக், கோபிநாத்தை அடித்து உதைக்குமாறு தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அதன் படி, கடந்த 29ம் தேதி ஈரோடு அடுத்த சோலாரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிக்க சென்ற கோபிநாத்தை அடிக்க விவேக்கின் நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி, விவேக்கின் நண்பர்களான சரவணன் (39), சதீஷ் (39) ஆகிய இருவரும், டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்த கோபிநாத்திடம், விவேக் மனைவியிடம் ஏன் பேசிக்கொண்டிருக்கிறாய்? எனக் கேட்டு தகராறு செய்துள்ளனர். மேலும், தகாத வார்த்தைகள் பேசியதோடு, கோபிநாத்தை டாஸ்மாக் கடை அருகே உள்ள காலியிடத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அது மட்டும் இல்லாமல், கீழே கிடந்த கல்லை எடுத்தும் தலை, முகத்தில் தாக்யுள்ளனர். கோபிநாத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

இதனை கவனித்த சரவணன் மற்றும் சதீஷ் அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும், இருவரும் தாக்கியதில் படுகாயம் அடைந்த கோபிநாத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கோபிநாத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சரவணன், சதீஷ் மற்றும் விவேக் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, கோபிநாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: ஆண்களே இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்… ஆண்மை குறைபாட்டின் முதல் எச்சரிக்கை இது தான்!

Saranya

Next Post

பெண்களே கவனம்!! நண்பன் கொடுத்த ஜூஸைக் குடித்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

Sun Jul 5 , 2026
கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வீடியோ எடிட்டிங் செய்யும் தொழிலை சொந்தமாக அலுவலகம் எடுத்து செய்து வருகிறார். கடந்த 2019-இல் இவருக்கு திருமணமான நிலையில், இவருக்கு தற்போது 4 வயதான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023 முதல் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். […]
Video 2025

You May Like