பெற்றோர்களே கவனம்!! விளையாடச் சென்ற 3 வயது குழந்தை சடலமாக மீட்பு..

WhatsApp Image 2026 07 06 at 11.38.03 AM

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான காரியம் அல்ல. முன்பெல்லாம் குடும்பத்தில் பெரியவர்கள் இணைந்து வசித்ததால், பெற்றோர் வேலைக்குச் சென்றாலும் குழந்தைகளை கவனிக்கவும், அவர்களுடன் உரையாடவும் வீட்டில் பெரியவர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போதைய காலத்தில் பல தம்பதிகள் பெற்றோர்களுடன் இணைந்து வாழ்வதை விரும்பாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் கணவன், மனைவி மற்றும் குழந்தை மட்டுமே உள்ள சிறிய குடும்ப அமைப்பு அதிகரித்துள்ளது.


இதன் காரணமாக குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாமல் சில நேரங்களில் அலட்சியம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. வேலைப்பளு மற்றும் கவனக்குறைவு காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குழந்தைகளின் மரணம் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்கின்றன. அந்த வகையில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணாபுரம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு 25 வயதான பூமிகா என்ற மனைவியும், லஷ்வின் என்ற 3 வயது மகனும் உள்ளனர். வழக்கம் போல், நேற்று மதியம் சிறுவன் லஷ்வின் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்க்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், சிறுவனை பல இடங்களில் தேடியுள்ளனர்.

மேலும், அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இருப்பாரோ? என்ற சந்தேகத்தில் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, சிறுவனின் சடலம் கிணற்றில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “இதுக்கெல்லாமா டா விவாகரத்து கேட்பீங்க?”கவுன்சிலரையே ஆடிப்போக வைத்த பெண்..

Saranya

Next Post

13 வயது மூத்தவருடன் காதல் தொடர்பு… மனைவியை அழைத்து சென்று கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Mon Jul 6 , 2026
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் 25 வயதான அங்கித். இவருக்கும் 22 வயதான ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் முடிந்துள்ளது. ஆனால் அங்கித், ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான ரஜினி தேவி என்ற பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், தனது பெற்றோரின் கட்டாயத்தால் ப்ரீதாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த கடந்த மே மாதம் 21 அன்று ப்ரீதா […]
ec4d752e1164ea2177c6d4fb02bd7512

You May Like