“எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது” ஆத்திரத்தில் வாலிபர் செய்த கொடூரச் செயல்..

virudhunagarfamilymurder down 93961784134997

காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி மருத்துவர் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு 45 வயதான விநாயகஜோதி என்ற மனைவியும், 21 வயதான வர்ஷா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வர்ஷாவுக்கும் முத்துக்குமாரின் அக்கா மகன் 32 வயதான யுவராஜா என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன் படி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் 2 வீட்டு உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


வர்ஷாவுக்கு 21 வயதாகிறது.. மணமகனான யுவராஜாவிற்கு 31 வயதாகிறது.. இந்த வயது வித்தியாசம் காரணமாக திருமணம் வேண்டாம் என்று வர்ஷா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர், தங்களின் மகள் கூறுவதை கேட்க்காமல் தான் நிச்சயம் செய்து வைத்துள்ளனர். நிச்சயம் முடிந்த பிறகும் வர்ஷா, “எனக்கு யுவராஜாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை” என்று தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், தனது திருமணம் நின்று விடுமோ என்று யுவராஜாவிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் கையில் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு வர்ஷாவின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அப்போது வர்ஷாவின் தாய் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும், தனது வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்த வர்ஷாவிடம், என்னை ஏன் திருமணம் செய்ய மறுக்கிறாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, யுவராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வர்ஷாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வர்ஷா ரத்த வெள்ளத்தில் அலறியபடி கீழே விழுந்தார். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு திரும்பி வந்த வர்ஷாவின் தாய் விநாயகஜோதி, ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகளை பார்த்து கதறி அழுதுள்ளார்.

ஆனால் வர்ஷாவை எப்படியாவது கொலை செய்து விட எண்டும் என்ற ஆத்திரத்தில், யுவராஜா மீண்டும் வர்ஷாவை வெட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது மகளை காப்பாற்ற ஓடிவந்த விநாயகஜோதியையும் யுவராஜா அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விநாயகஜோதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த வர்ஷாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார், விநாயகஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்க்கிடையே, யுவராஜா தான் பயன்படுத்திய அரிவாளுடன் மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: “என்னோட பொண்டாட்டி குளிக்கிறத நீ எதுக்கு பாக்குற?” ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்!

Saranya

Next Post

வசம்பின் அசத்தலான பாரம்பரிய பயன்பாடுகள்… தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

Fri Jul 17 , 2026
தமிழர் பாரம்பரிய மருத்துவ முறைகளில் முக்கிய இடம் பெறும் மூலிகைகளில் ஒன்றாக வசம்பு கருதப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வீட்டு வைத்தியமாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. வசம்பை லேசாகச் சுட்டு, பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் பல குடும்பங்களில் தொடர்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை குறைவதோடு, சிறிய அளவிலான தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் குறையும் என்று பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே வசம்புக்கு […]
images 23

You May Like