முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக மாற்றியுள்ளது தற்போதய தவெக அரசு. அதுமட்டுமின்றி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான
இந்த காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு செப்.15-ம் தேதி அறிஞ்ஞர் அண்ணா பிறந்த நாளில் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ கொண்டுவந்தார். அதன் பின்னர் 2023 ஆக.25-ம் தேதி அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது வரை 17.55 லட்சம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.
தற்போது ஆட்சி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் செப்.17-ம் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாள் முதல் 6முதல்8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதன்முதலில் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது வறுமையின் காரணமாக எந்தக் குழந்தையும் கல்வி கற்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக, 1956 ஆம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்பின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பின்பு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தநேரத்தில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டுவந்தார். தற்போது முதலமைச்சராக உள்ள விஜய் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கலைஉணவு திட்டத்தை விரிவுபடுத்திள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



