100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச படங்கள்… பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நபர் செய்த அதிர்ச்சி செயல்!

Video 2025

காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை அனுமதியின்றி ஆபாச நோக்கத்தில் வீடியோ பதிவு செய்ததாக 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துக்காக காத்திருந்த மாணவியை, செல்போனில் பேசிக்கொண்டிருப்பது போல நடித்து அந்த நபர் ரகசியமாக படம் பிடித்துள்ளார். இதை அருகில் இருந்த மற்றொரு மாணவி கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


தகவளின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற போலீசார், அந்த நபரை பிடித்து அவரிடமிருந்த இரண்டு மொபைல் போன்களை கைப்பற்றினர். அவற்றை டிஜிட்டல் ஆய்வுக்கு உட்படுத்திய போது, ஏராளமான பெண்களின் அனுமதியின்றி பதிவு செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது. விசாரணையில், கைது செய்யப்பட்டவர் கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது உறுதியானது.

அவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களை இதுபோன்ற ஆபாச படங்கள், வீடியோ எடுத்து ரசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இவ்வாறு 100-கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்துள்ளார். மேலும், அவரது இந்த பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், மனைவி எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அவர் திருந்தாததால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவரது மனைவி இவரது இந்த பழக்கத்தை கைவிடும்படி கூறியும் அவர் கேட்காததால் அவரது மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: எச்சரிக்கை!! செல்போனில் பலான படம் பார்த்த நபருக்கு வந்த போன் கால்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

Saranya

Next Post

பெற்றோர்களே கவனம்… பள்ளி முடிந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Sun Jul 26 , 2026
தென்காசி மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி, சாலையை கடக்க முயன்றபோது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 17 வயது சிறுவன் மற்றும் வாகன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த பீட்டரின் 8 வயது மகள் ஜீவிதா, […]
9b6a8bd151689d92dbcc705343840d5f 1

You May Like