“இந்தப் பொண்ணு என்னோட பையனைக் கெடுத்துட்டா…” தாய் அளித்த பரபரப்பு புகார்! வீட்டில் பெற்றோர் இல்லாத போது சிறுவனுக்கு நடந்த சம்பவம்…

aus women birth 17 hours pregnant 11zon

குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சார்ந்தவர் 19 வயதான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், மருத்துவர்கள் கணவரின் விவரம் குறித்து கேட்டதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து, மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், நிஷாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் அளித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், நிஷா, குழித்துறையில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில், விமான பணியாளர்கள் தொடர்பான டிப்ளமோ படிப்பை படித்து வந்துள்ளார். அதே கல்வி நிலையத்தில் அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சார்ந்த 17 வயது சிறுவனும் படித்து வந்துள்ளார்.

இந்தப் பாடப்பிரிவில், நிஷா மற்றும் அந்த சிறுவன் மட்டும் தான் படித்து வந்துள்ளனர். வேறு மாணவர்கள் கிடையாது. இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். மேலும், இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டில், பெற்றோர்கள் இல்லாத நேரம் தனியாக சென்ற நிஷா, சிறுவனை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார்.

இவ்வாறு பலமுறை உடலுறவு கொண்ட நிலையில், நிஷா கர்ப்பம் அடைந்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை அவர் தனது பெற்றோரிடம் மறைத்துள்ளார். இந்நிலையில், சிறுவனின் தாயார் “எனது மகனை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டதாக” நிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார், நிஷா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “உனக்கு என்னைவிட கள்ளக்காதலிதான் முக்கியமா?” ஆத்திரத்தில் 7 மாத குழந்தையின் தாய் செய்த காரியம்…

Saranya

Next Post

"அம்மா வேணும்…" கதறித் துடித்த 3 பிஞ்சு குழந்தைகள்; செல்போன் பிஸியாகவே இருந்ததால் தாய்க்கு நேர்ந்த சோகம்…

Mon Jul 27 , 2026
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் லூர்து குமார். இவருக்கு 24 வயதான ரெபேக்கா என்ற மகள் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ரெபேக்காவிற்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 36 வயதான பாகப்பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பாகப்பிரகாஷ், பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், மதுபான பார் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரதீஸ்வரி (4), பிரணிதா (2), பிரகிதா (2) […]
080e0db23fd065036183d63b8c0f597d

You May Like