ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கையால் உச்சகட்ட பதற்றம்..!

Tsunami 2026

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் நாடு முழுவதும் பரவலாக நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், கடலோரப் பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.


இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, புகுவோகா, சாகா, ஓயிட்டா மற்றும் மியாசாகி உள்ளிட்ட தெற்கு கியூஷு தீவு மாகாணங்களுக்குப் பேரிடர் கால அவசரகால நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சொத்து சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், பாதிப்புகள் குறித்துத் துரிதமாகக் கண்டறியும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு அவசர உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மனித உயிர்களைக் காப்பதற்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அவசரகால பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அனைத்துத் துறைகளும் முழு வீச்சில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : இந்திய வரலாற்றிலேயே முதன்முறை..!! அனுமதி வழங்கியது மத்திய அரசு..!! வேலையை ஆரம்பித்த RBI..!!

Next Post

மீண்டும் அடம்பிடித்த கர்நாடகா..! ஒரே போடாக போட்ட ஒழுங்காற்று குழு..! தமிழகத்திற்கு வருகிறது காவிரி நீர்..!!

Tue Jul 28 , 2026
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் […]
Kaveri 2026

You May Like