மீண்டும் அடம்பிடித்த கர்நாடகா..! ஒரே போடாக போட்ட ஒழுங்காற்று குழு..! தமிழகத்திற்கு வருகிறது காவிரி நீர்..!!

Kaveri 2026

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் இருப்பு மற்றும் மழைப்பொழிவு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கமாகும்.


அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மேட்டூர் மற்றும் கர்நாடக அணைகளின் தற்போதைய நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் உள்ளது. ஜூன் மாதத்தில் கர்நாடக அணைகளுக்கு எந்தவித நீர்வரத்தும் இல்லை. ஜூலை மாதத்தில் போதிய மழை இல்லாததால், அணையில் குறைந்த அளவிலான நீர் தான் உள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதால், அணைகளில் இப்போது இருக்கும் தண்ணீரை கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். தங்கள் மாநிலமே நீர் தட்டுப்பாட்டில் இருக்கும்போது, தமிழகத்திற்கு எப்படி நீர் திறக்க முடியும்? என வாதிட்டனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு, தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, தினசரி 3,500 கனஅடி நீர் வீதம் காவிரியில் திறந்து விடப்பட்டால், அடுத்த அரை மாத காலத்தில் தமிழகத்திற்கு ஒட்டுமொத்தமாக 4.57 டி.எம்.சி தண்ணீர் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : இந்திய வரலாற்றிலேயே முதன்முறை..!! அனுமதி வழங்கியது மத்திய அரசு..!! வேலையை ஆரம்பித்த RBI..!!

You May Like