அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகம் அசுர வளர்ச்சி அடைந்து விட்ட போதிலும், இன்றும் சில பழங்குடியின மக்கள் தங்களின் பலநூறு ஆண்டுகால மரபுகளையும் கலாச்சாரத்தையும் சிறிதும் மாற்றாமல் பின்பற்றி வருகின்றனர். அதற்கு உதாரணமாக விளங்குகிறது ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் வாழும் ‘ஹிம்பா’ (Himba) பழங்குடியின சமூகம். சுமார் 50,000 மக்கள் தொகையை கொண்ட இந்தச் சமூகம், நவீன உலகிற்கு சற்றும் தொடர்பில்லாமல் தங்களது தனித்துவமான பழக்கவழக்கங்களைப் பாதுகாத்து வருகிறது.
இவர்களின் முதன்மை வாழ்வாதாரமே தினமும் உணவைத் தேடி அலைவதுதான். இதில் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தண்ணீரைப் பயன்படுத்தி உடலைக் கழுவுவதற்கு அல்லது குளிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் வாழ்வதால், இவர்கள் தண்ணீருக்குப் பதிலாகச் சில மூலிகைகளை எரித்து, அதிலிருந்து வரும் புகையை உடம்பில் செலுத்தி ‘புகைக் குளியல்’ (Smoke Bath) எடுக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இது உடலைத் தூய்மையாகவும் துர்நாற்றமின்றியும் வைத்திருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
இதைவிட உலகை அதிர்ச்சியடைய வைக்கும் மற்றொரு மரபும் இவர்களிடம் நிலவுகிறது. தங்கள் கிராமத்திற்கு வரும் புதிய விருந்தினர்களுக்கு உணவோடு சேர்த்து வீட்டுப் பெண்களையும் ‘விருந்தளிக்கும்’ (Wife Sharing Tradition) பழக்கத்தை இவர்கள் கடைப்பிடிக்கின்றனர். வீட்டிற்கு வரும் விருந்தினரை கௌரவிக்கும் உச்சகட்ட விருந்தோம்பலாக இது கருதப் பெறுகிறது. விருந்தாளி தங்குவதற்காகத் தனி அறை ஒதுக்கப்பட்டு, கணவன் தன் மனைவியை அவருடன் தங்குவதற்கு அனுப்பிவிட்டுத் தான் வேறு இடத்தில் உறங்கச் செல்வார். இந்த நடைமுறை இரு தரப்பினராலும் எவ்வித ஆட்சேபனையுமின்றி விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இவர்களின் இந்த விசித்திரமான பாரம்பரியங்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று வெளியான பிறகுதான், வெளி உலகிற்கு இவர்களைப் பற்றிய தகவல்கள் தெரியவந்தன. நவீன சமுதாயம் இவர்களின் பழக்கவழக்கங்களை கண்டு வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தாலும், ஹிம்பா பழங்குடியினர் தங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை அப்படியே பின்பற்றி வருகின்றனர்.
Read More : கட்சி நிதி பேரில் லஞ்சம்..!! முதலீடு வராததற்கு காரணமே இதுதான்..!! விளாசிய அமைச்சர் அருண்ராஜ்..!!



