நிரம்பியது பில்லூர் அணை..!! காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Kovai Pillur Dam 2026

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, பவானி ஆற்றில் வினாடிக்கு 8,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள கேரள மாநிலப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று முதல் கணிசமாக உயர தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்த நிலையில், ஏற்கனவே 95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 97 அடியை எட்டியது.

அணை நிரம்பியதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதையும் அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, நீர் மின்சார உற்பத்தி மூலம் 6,000 கன அடி தண்ணீரும், அணையின் 4 மதகுகள் வழியாக 2,000 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : அப்பளம் போல் நொறுங்கிய கார்..!! 5 பேர் துடிதுடித்து மரணம்..!! பொள்ளாச்சியில் சோகம்..!!

Next Post

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடு..!! 3 பேர் உயிரிழந்த சோகம்..!! கனமழையால் பேரதிர்ச்சி சம்பவம்..!!

Sun Aug 2 , 2026
கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ஷிவ்மோகா மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனால், மலைப்பகுதிகளில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஷிவ்மோகா மாவட்டம் மலநாடு மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கொட்டகையின் மீது மண் சரிந்து விழுந்தது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். எனினும், அந்தக் கொட்டகையில் வசித்து […]
Kartanaka 2026

You May Like