தவெகவில் இணைந்தவர்களுக்கு ஜாக்பாட்..!! புதிய பொறுப்புகள் வழங்கி விஜய் உத்தரவு..!!

cm vijay n 4

தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதிய செய்தி தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார்.


மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த மூத்த தலைவர்களான வைகைச்செல்வன், கலைராஜன், மகேந்திரன், புகழேந்தி மற்றும் அமெரிக்கை நாராயணன் ஆகியோருக்கு தவெகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக பெலிக்ஸ் ஜெரால்ட், வழக்கறிஞர் சத்யகுமார், விக்னேஸ்வரன், தேன்மொழி பிரசன்னா, நாராயணன், சசிரேகா, செல்வக்குமார் மற்றும் விவேக் கணநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநில அளவிலான செய்தி தொடர்பாளர்களாக முகில் வீரப்பன், இன்பராஜ், முஹமது இப்ராஹிம், ஜெகதீசபாண்டியன், ஜெயக்குமார், கந்தசாமி, ஜலீல், தேவகுமார் மற்றும் சவுந்தரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், தனது உத்தரவுகள் மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதல்களின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், புதிய நிர்வாகிகளின் பணிகளுக்கு கட்சியினர் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More : காவிரி விவகாரத்தில் அடுத்த பாய்ச்சல்..! இனியும் கெஞ்ச முடியாது..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய தமிழக அரசு..!

Next Post

இடி, மின்னலுடன் ஊற்றப்போகும் கனமழை..!! 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

Mon Aug 3 , 2026
தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் […]
Rain 2025

You May Like