இடி, மின்னலுடன் ஊற்றப்போகும் கனமழை..!! 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

Rain 2025

தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கடலோர தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், வட தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், வட கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு வேளைகளில் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : காவிரி விவகாரத்தில் அடுத்த பாய்ச்சல்..! இனியும் கெஞ்ச முடியாது..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய தமிழக அரசு..!

Next Post

இனி வெறும் ரூ. 12 மட்டும் தான்..!! ஆவின் நிர்வாகத்தின் அடுத்த அதிரடி..!!

Mon Aug 3 , 2026
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் புதிய ‘மில்க் ரஸ்க்’ விற்பனையை மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் பால் வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், நாள்தோறும் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சீராக விநியோகித்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக பால் மட்டுமின்றி பால்கோவா, பாதாம் […]
Aavin 2025

You May Like