மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் தமது நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை வந்த அவருக்கு, விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், பின்னர் கார் வாயிலாக ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பங்கேற்றார்.
தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். மத்திய அமைச்சரின் வருகையை ஒட்டி திருவண்ணாமலை மற்றும் கோவில் வளாகத்தை சுற்றிப் பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Read More : மதுபோதையில் வீட்டுக்குள் போன காதலன்..!! அலறியடித்து ஓடிவந்த கள்ளக்காதலி..!! திடுக்கிடும் சம்பவம்..!!


