தமிழகம் வந்தார் அமித்ஷா..!! அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம்..!!

Amit Shah 2026

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் தமது நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை வந்த அவருக்கு, விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், பின்னர் கார் வாயிலாக ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பங்கேற்றார்.

தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். மத்திய அமைச்சரின் வருகையை ஒட்டி திருவண்ணாமலை மற்றும் கோவில் வளாகத்தை சுற்றிப் பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Read More : மதுபோதையில் வீட்டுக்குள் போன காதலன்..!! அலறியடித்து ஓடிவந்த கள்ளக்காதலி..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Next Post

“போடா டேய் பைத்தியக்காரா”..! கூல் சுரேஷை காய்ச்சி எடுத்த சீமான்..! என்ன காரணம்..?

Sun Aug 9 , 2026
முதல்வர் விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றனர். முன்னதாக கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும், அரசுப் பணிக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில், […]
Seeman 2026

You May Like