சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் 58 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரியின் வாழ்த்துப்பாடல் முதலாவதாக பாடப்பட்டது அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதாவது, நேற்றைய தினத்தில் பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தார். இந்த நிலையில் இன்று அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமார், 1050 கோடி ரூபாய் விளையாட்டு துறைக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். மாணவர்களை நல்வழி படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார். தொடர்ந்து தொகுதி மறு வரையறை தொடர்பாக தயாநிதி மாறன் தனது எக்ஸ்ளத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தயாநிதி மாறனை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன் 2021 வரை 2026 வரை இதே திராவிட முன்னேற்ற கழகம் தலைவர் முதல்வராக இருந்த ஸ்டாலின் அவர்கள் மறுவறைக்கு எல்லா கட்சித் தலைவர்களையும் கூப்பிட்டு மறுவரையறை எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய மாநில முதல்வர்களை அழைத்து பிரச்சினையை என்று கூட்டம் போட்டு எதிர்த்தார் அதை என்னவென்று தயாநிதி மாறன் கூறுகிறார்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து மரிய வில்சன் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேஷ்குமார், அமைச்சர் மரிய வில்சனின் பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது வழிபாட்டு முறை என்பது ஒருத்தருடைய அடிப்படை உரிமை அவருடைய வழிபாடு கிறிஸ்தவ வழிபாடு அதனை அவர் சொல்லி இருக்கிறார் சட்டமன்ற உறுப்பினர் திரித்து சொன்னார். அவருடைய உடல் மொழியில் அவர் பேசியிருக்கிறார் கடந்த முறை நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனின் உச்சரிப்பு குற்றம் சொல்ல முடியாது. ஆனாலும் அவரும் இதே மொழியில் தானே பேசினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழ்த்தாய் வாழ்த்து பொது நிறுவனங்கள் அரசு பள்ளிகள் அரசு அலுவலகங்கள் இப்படிப்பட்ட இடங்களில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும். இது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் கல்லூரி என்பதால் சின்னதாக ஜெபம் செய்தார்கள் அதை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து ஆனால் முதலில் தமிழ் தாய் வாழ்த்து தான் பாடப்பட்டது என்று விளக்கமளித்தார்.
நீட் தேர்வு தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக வெளியான தகவல் தொடர்பான கேள்விக்கு, நீட் தேர்வை பொருத்தவரை பல கட்ட போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம் நீட் தேர்வை நாங்கள் எதிர்த்து தான் இருக்கிறோம் சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள் அதனை ஆதரித்து இருக்கிறோம், கிராமப்புற மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் கிட்டத்தட்ட 38 பேர் உயிரை மாய்த்து இருக்கிறார்கள் எங்களை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களுக்கு நீட் சரியாக இருக்காது பன்னிரண்டாம் வகுப்பில் என்ன மதிப்பெண் இருக்கிறதோ அதன் அடிப்படையில் தான் தேர்ச்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.


