வீடு புகுந்து தாய், மகளை வெட்டி சாய்த்த காதலன்..! பல்லடத்தில் கொடூரம்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Thirupur 2026

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி தனலட்சுமி. இருவரும் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். இவர்களது மகள் பூவரசி, வயது 21, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.


இன்று காலை பழனிசாமி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் இருந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் கொண்டு வந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தாய், மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்சயன், வயது 26, என்பது தெரிய வந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக பூவரசியும் அக்சயனும் சமூக வலைதளம் மூலம் பழகி, காதலித்து வந்துள்ளனர். இருவரும் சில மாதங்களுக்கு முன் பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்து பூவரசியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. ஆத்திரமடைந்த பெற்றோர் அக்சயனுடன் இனிமேல் பேசக்கூடாது என்று கூறி தாலியையும் கழட்டி எறிந்துள்ளார்.

இதையடுத்து, பூவரசியிடம் அக்சயன் தொலைபேசியில் பலமுறை பேச முயன்ற போதும், அவர் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இதற்கிடையே, பூவரசியை பார்ப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து பல்லடம் வந்த அக்சயன், கடந்த 4 நாட்களாக லாட்ஜில் தங்கி இருந்துள்ளார்.

இன்று காலை, பழனிசாமி வேலைக்குச் சென்றதை பார்த்த அக்சயன், பூவரசியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அக்சயன் தனலட்சுமியிடம் பூவரசியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆவேசமடைந்த அக்சயன், தனலட்சுமியையும், பூவரசியையும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அக்சயனை கைது செய்த பல்லடம் போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : நீட் ரத்து தீர்மானத்தை ஏற்கவில்லை..! பாஜக எம்.எல்.ஏ. வெளிநடப்பு..!

Next Post

காவிரியில் தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க பரிந்துரை!. கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி!

Tue Aug 11 , 2026
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில், இரு மாநில தரப்பு வாதங்களும் விரிவாகக் கேட்கப்பட்டன. முடிவில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 11,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்துள்ளது. இது நாளொன்றுக்கு தோராயமாக […]
cauvery water meeting

You May Like