லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! 4 மணி நேரத்தில் 2 முறை அதிர்வால் பொதுமக்கள் பீதி!.

earthquake

லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை அன்று ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த ஒன்றிய பிரதேசத்தில் நான்கு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.


தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, இந்த இரண்டாவது நிலநடுக்கம் காலை 9.54 மணியளவில் ஏற்பட்டது. இது வடக்கே 36.765 அட்சரேகையிலும், கிழக்கே 75.326 தீர்க்கரேகையிலும், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.

முன்னதாக, அதிகாலை 6.05 மணியளவில் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான சக்திவாய்ந்த முதல் நிலநடுக்கம் லடாக்கை தாக்கியது. இது வடக்கே 36.881 அட்சரேகையிலும், கிழக்கே 74.402 தீர்க்கரேகையிலும், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்‌திருந்தது. இருப்பினும், இந்த இயற்கை சீற்றங்களால் இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

1newsnationuser5

Next Post

கர்நாடகாவில் பந்த்!. வாட்டாள் நாகராஜ் கைது!. தற்போதைய நிலவரம் என்ன?

Thu Aug 13 , 2026
காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவைக் கண்டித்து, கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த பந்த் போராட்ட அறிவிப்பு இருந்தாலும், கர்நாடகா முழுவதும் பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகள் வழக்கம்போலவே இயங்கி […]
karnatakabanth

You May Like