அலர்ட்!. வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!. மீனவர்களுக்கு எச்சரிக்கை!

fishermanalert

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தற்போது மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், வரும் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை மேற்கு வங்கம், ஒடிசா, வங்கதேசம் மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட இந்த நாட்களில் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

1newsnationuser5

Next Post

இந்த 2 அமைச்சர்களிடம் கொஞ்சம் கவனமா இருங்க..!! முதல்வர் விஜயை எச்சரிக்கும் டெல்லி..!!

Sun Aug 16 , 2026
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 2 முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகள், முதல்வர் விஜய்க்கு அரசியல் ரீதியாக புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் மீது தொடக்கத்திலேயே ஊழல் புகார்கள் எழ தொடங்கியுள்ள நிலையில், மற்றொரு அமைச்சர் மத்திய அரசையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் […]
assemblycmvijay

You May Like